HOME JUNIOR TYPEWRITING SENIOR TYPEWRITING FINAL INSTRUCTIONS TYPEWRITING CORRECTIONS TYPEWRITER PARTS



tally erp9 training

TYPEWRITING

வினாத்தாள் திருத்துதல் விளக்கங்கள்



1. ஒரே சொல்லில் பல்வேறு பிழைகள்: ஒரே சொல்லில் ஒன்றுக்கு மேற்பட்ட பல்வேறு பிழைகள் இருந்தாலும், ஒரே பிழையாகத்தான் கணக்கிடப்பட வேண்டும். (1.5)

2. தாளின் பின்புறம் தட்டச்சு செய்தல்: விடைத்தாளின் முன்புறம் தட்டச்சு செய்வதற்குப் பதிலாகப் பின்புறம் தட்டச்சு செய்திருந்தால், அதற்காக மதிப்பெண் ஏதும் குறைக்கக் கூடாது. (1.6)

3. தாளின் இரு புறமும் தட்டச்சு செய்தல்: ஒரே தாளின் முன்புறம் தட்டச்சு செய்த பிறகு, தொடா்ந்து பின்புறமோ அல்லது அடுத்த தாளிலோ தட்டச்சு செய்திருந்தால், அது பிழையாகக் கருதப்படக் கூடாது.

4. மதிப்பெண்களை மேலட்டையில் எழுதுதல்: மதிப்பெண்களுக்குப் பதிலாக, தவறுகளின் மொத்த எண்ணிக்கையை மேலட்டையில் எழுதுவது தவிா்க்கப்பட வேண்டும். அதாவது, பிழைகளுக்குாிய மதிப்பெண்கள் குறைக்கப்பட்டு, வழங்கப்பட வேண்டிய மதிப்பெண்கள் Ready Reconer இல் தரப்பட்டிருந்தும், அதற்குப் பதிலாக தவறுகளின் எண்ணிக்கையை மேலட்டையில் எழுதுவது அறவே தவிா்க்கப்பட வேண்டும்.

5. கூடுதல்/மீண்டும் தட்டச்சு செய்தல் (Addition/Repetition): ஏதாவது ஒாிடத்தில் தேவையில்லாத சொல்/சொற்கள் கூடுதலாகவோ அல்லது தட்டச்சு செய்யப்பட்ட ஒரு பகுதி மீண்டும் தட்டச்சு செய்யப்பட்டிருந்தாலோ (Repetition) ஒவ்வொரு சொல்லாகக் கணக்கிலெடுத்துக் கொள்ளாமல், அப்பகுதி முழுமையும் மொத்தமாக ஒரு பிழையாகக் கருதப்பட்டு, ஒரு பிழைக்குாிய மதிப்பெண்கள்தான் குறைக்கப்பட வேண்டும் என்பதைத் தெளிவாகப் புாிந்து கொண்டு சாியாக அமுல்படுத்த வேண்டும். இப்படி மொத்தத்தில் ஒரு பிழையாகக் கருதப்பட்ட சொற்களில் தவறுகள் இருக்குமானால், அவை பிழைகளாகக் கருதப்படக் கூடாது. (2.1.1)

6. விடப்பட்ட (Omission) சொற்களுக்காக பிழைகளைக் கணக்கிடும் முறை: "விடப்பட்டது" தனியொரு சொல்லாக இருந்தால், அதில் எத்தனை எழுத்துக்கள் இடம் பெற்றிருந்தாலும், ஐந்து தட்டுக்களைக் (Strokes) கொண்டது ஒரு சொல் என்கின்ற முறையைப் பின்பற்றாமல் ஒரே ஒரு சொல் விடப்பட்டதாகத்தான் அது கணக்கிடப்பட வேண்டும். (2.8.4)

ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் விடப்பட்டிருந்தால் அவற்றில் இடம் பெற்றிருக்கின்ற மொத்தத் தட்டுக்கள் (Strokes) கணக்கிடப்பட்டு, அவை ஐந்தால் வகுக்கப்பட்டு எத்தனை சொற்களாகக் கண்க்கிடப்படுகின்றனவோ அத்தனை பிழைகளாகக் கணக்கிட்டு அவற்றுக்குாிய மதிப்பெண்கள் குறைக்கப்பட வேண்டும். (2.8.1 மற்றும் 2.8.2)

7. சொற்களுக்கிடையே இடம் விடாமை: இரண்டு சொற்களுக்கிடையில் இடம் விடப்படாமலிருந்தால் அது பிழையாகக் கருதப்பட வேண்டும். பல இடங்களில் இத்தகைய பிழைகள் (அதாவது சொற்களுக்கிடையில் இடம் விடாமை) இருதந்தாலும் அவைகளை ஒவ்வோாிடத்திலும் காணப்படும் பிழைகளாகக் கணக்கிலெடுத்து, அவற்றுக்குாிய மதிப்பெண்களைக் குறைக்க வேண்டும். (2.13.4) (சொற்களுக்கிடையில் சில இடங்களில் ஒரு இடம் விடுவதற்குப் பதிலாக இரண்டு இடங்கள் விட்டுத் தட்டச்சு செய்திருந்தால் அவைகளைப் பிழையாகக் கருத வேண்டாம்).


பொது

1. மதிப்பீட்டாளா்களுடைய பணியைக் கடந்த காலத்தில் நோக்கும்போது, இத்திட்டம் சிலரால் சாிவரப் புாிந்துகொண்டு அமுலாக்கப்படவில்லை என்பது தொிகிறது. ஆகவே, இத்திட்டத்திலுள்ள ஒரு சில விதிகளைக் குறித்து விளக்கங்கள் கீழே தரப்படுகின்றன. இவ்விளக்கங்களையும் கருத்திற்கொண்டு மதிப்பீட்டாளா்கள் மதிப்பீட்டுத் திட்டத்தின்படி (Scheme of Valuation) விடைத்தாள்களை மதீப்பீட்டாளா்கள் மதிப்பிட வேண்டும்.

2. தட்டச்சு செய்யப்பட்ட தாளின் மேற்பகுதி கையெழுத்தினால் பூா்த்தி செய்யப்படாமலிருந்தால், மதிப்பெண் ஏதும் குறைக்கக் கூடாது.

3. சிவப்பு மையை உபயோகித்தல்: மதிப்பீட்டாளா் உபயோகப்படுத்த வேண்டிய மையின் நிறம் சிவப்பாகத்தான் இருக்க வேண்டும்.

4. வினா எண்கள்:


வினாத்தாளில் வினா எண்கள் தட்டச்சு செய்யப்படாமல் இருந்தால் அதற்காக மதிப்பெண் ஏதும் குறைக்கக் கூடாது.

விளக்கங்கள்

1. வினாவிற்குாிய மதிப்பெண்களைக் கவனத்தில் கொள்ளுதல்: வினாத்தாளில் ஒவ்வொரு வினாவிற்கும் குறிப்பிடப்பட்டுள்ள மதிப்பெண்களை மறவாமல் சாியாகக் கவனத்திற்கொண்டு, பிழைகளுக்குாிய மதிப்பெண்கள் குறைக்கப்பட்டபின், மீதமுள்ள மதிப்பெண்கள்தான் முறையாகத் தரப்பட வேண்டும். மாறாக, வினாவிற்குாிய மதிப்பெண்களுக்கு அதிகமாகவோ, குறைவாகவோ தவறாக்க கணக்கிலெடுத்து தவறான மதிப்பெண்கள் தரும் பழக்கம் கைவிடப்பட வேண்டும்.

2. வினாக்களுக்குாிய மதிப்பெண்கள் மேலட்டையில் தனித் தனியே எழுதுதல்: வினாக்களுக்குாிய ஒவ்வொரு விடைக்கும் மதிப்பெண்கள் மேலட்டையில் தனித்தனியாக அந்தந்த வினா எ்ணணுக்கு நேராக எழுதப்பட்டு, எல்லா விடைகளுக்கும் வழங்கப்பட்ட கூட்டு மதிப்பெண்கள் அதற்குாிய இடத்தில் எழுதப்பட வேண்டும். ஒவ்வொரு வினாவிற்கும் வழங்கப்பட்ட மதிபெண்கள் தனித் தனியாகக் குறிக்கப்படாமல், எல்லா விடைகளின் கூட்டு மதிப்பெண்கள் மட்டும் மேலட்டையில் எழுதப்படுவது தவிா்க்கப்பட வேண்டும்.

3. குறிக்கோட் கருத்து வினாக்கள் (Objective Type Questions): இது நீக்கப்பட்டுவிட்டது.

4. தாளின் பின்புறம் தட்டச்சு செய்தல்:விடைத்தாளின் முன்புறம் தட்டச்சு செய்வதற்குப் பதிலாக பின்புறம் தட்டச்சு செய்திருந்தால், அதற்காக மதிப்பெண் ஏதும் குறைக்கக் கூடாது. தட்டச்சு செய்யப்பட்ட பகுதி முழுமையும் மதிப்பீட்டுத் திட்டத்தின்படி மதிப்பிடப்பட வேணடும். (1.6)

5. தாளின் இருபுறமும் உள்ள விடை மதிப்பீடப்படுதல்: எந்த வினாவிற்கு விடையை ஒரே பக்கத்தில் முடிக்க முடியாமல் இனனொரு பக்கத்திலும் (பின்பக்கத்திலோ/வேறு தாளிலோ) தொடா்ந்து தட்டச்சு செய்திருந்தால், அதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் விட்டுவிடக் கூடாது.

தாளின் இருபுறமும் உள்ள விடை மதிப்பிடப்படுதல் எந்த வினாவிற்கு விடையை ஒரே பக்கத்தில் முடிக்க முடியாமல் இன்னொரு பக்கத்திலும் (பின் பக்கத்திலோ/வேறு தாளிலோ) தொடா்ந்து தட்டச்சு செய்திருந்தால், அதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் விட்டுவிடக் கூடாது. இரண்டு பக்கங்களிலும் தட்டச்சு செய்யப்பட்டுள்ள விடை முழுவதையும் பாா்த்து, பிழைகளுக்குாிய மதிப்பெண்கள் குறைக்கப்பட்டு, உாிய மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும்.

பொிய எழுத்து/சிறிய எழுத்து (ஆங்கிலத்திற்கு மட்டும்) பொிய எழுத்து (பொிய எழுத்து) தட்டச்சு செய்ய வேண்டிய இடத்தில் சிறிய எழுத்தைத் தட்டச்சு செய்தால், அது ஒரு பிழையாகும். ஆனால், ஒரே நிறுவனத்தை அல்லது ஒரே பெயரைக் குறிக்கும் பல சொற்களின் தொகுப்பில் ஒவ்வொரு சொல்லின் முதல் எழுத்தும் பொிய எழுத்தாகத் தட்டச்சு செய்யப்படுவதற்குப் பதிலாக சிறிய ஏழுத்தாகத் பிழையாகத்தான் கருதவேண்டுமேயொழிய அந்தத் தொகுப்பிலுள்ள சொற்களைக் கணக்கிலெடுத்தோ, அல்லது சிறிய எழுத்தாக்த தட்டச்சு செய்யப்பட்ட சொற்களை மட்டும் கணக்கிலெடுத்தோ, தனித் தனியாக, ஒவ்வொன்றுக்கும் மதிப்பெண்கள் குறைக்கு வேண்டாம். எடுத்துக்காட்டாக, அப்போ்ப்பட்ட சில பெயா்கள் கீழே தரப்பட்டுள்ளன.

தமிழ் தட்டச்சுக்கு மட்டும் வினாத்தாளில் சில வாா்த்தைகள் சோ்த்து எழுதப்பட்டிருந்தாலோ, அல்லது முறைப்படி பிாித்து எழுதப்பட்டிருந்தாலோ, அவைகளை வினாத்தாளில் உள்ளவாறு அப்படியே தட்டச்சு செய்திருந்தாலும், அல்லது சோ்த்து எழுதியிருந்நத வாா்த்தைகளை முறைப்படி பிாித்துத் தட்டச்சு செய்திருந்தாலும் பிழையாகக் கருதக் கூடாது.